சீனாவில் உயர் தொழில்நுட்ப சாதனங்களின் தயாரிப்பில் சாதனைகள்
2023-01-12 13:25:25

விமானம், விண்வெளி, கப்பல், தண்டவாளம், வாகனம், மின்சாரம் முதலிய உயர் தொழில்நுட்ப சாதனங்களின் தயாரிப்புத் துறை,  ஒரு நாட்டின் தொழில்துறை உற்பத்தித் திறன் மற்றும் புத்தாக்கத் திறனை எடுத்துக்காட்டுகிறது. இந்த தயாரிப்புத் துறையில் சீனா முன்னேற்றம் பெற்று வருகிறது. ஜனவரி 1ஆம் நாள் உலகின் முதல் சி919 ரக பயணியர் விமானம் புத்தாண்டில் முதலாவது பறத்தல் சோதனை நிறைவேற்றியுள்ளது.

அதுபோன்றே, விண்வெளி நிலைலயத்துக்கு வீரர்களை அனுப்பும் ஷென்ஜோ-15 விண்கலம் ஏவூர்தி மூலம் கடந்த நவம்பர் 29ஆம் நாள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. மறுநாள், சீன விண்வெளி வீரர்கள் மூவர் விண்வெளி நிலையத்திற்குள் நுழைந்து, ஷென்ஜோ-14 குழுவின் 3 விண்வெளி வீரர்களை சந்தித்தனர். சீனாவின் விண்வெளி வளர்ச்சி வரலாற்றில் இத்தகைய சந்திப்பு முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

2021ஆம் ஆண்டின் இறுதியில், கப்பல்களின் மூலம் மொத்தமாக 35 கோடி டன் சரக்குகளைச் சுமந்து செல்லும் திறனை சீனா கொண்டது. இது உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

உலகிலேயே முதன்முறையாக 1 இலட்சம் டன்னுடன் கூடிய இயற்கை எரிவாயு அகழ்வுத் தளமான ஆழ்கடல்-1, 2021ஆம் ஆண்டின் ஜூன் 25ஆம் நாள் செயல்பாட்டுக்கு வந்தது.