பிரிட்டனுக்கு சீனா வேண்டுகோள்
2023-01-13 19:59:29

ஹாங்காங் பிரச்சினை பற்றி அண்மையில் வெளியிடப்பட்ட அரையாண்டு அறிக்கையில், சீனாவின் ஹாங்காங் நிர்வாகத்தின் மீது பிரிட்டன் குற்றஞ்சாட்டியது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் வாங் வென்பின் 13ஆம் நாள் கூறுகையில்,

இவ்வறிக்கை, ஹாங்காங் விவகாரத்திலும் சீன உள் விவகாரத்திலும் கடுமையாக தலையீடு செய்துள்ளதுடன், சர்வதேச சட்டத்தையும் சர்வதேச உறவின் அடிப்படைக் கோட்பாட்டையும் மீறியுள்ளது. இத்தகைய தலையீட்டை பிரிட்டன் அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா வலியுறுத்துகிறது என்றார்.