பாதுகாப்பான மற்றும் பயனுள்ள சீனாவின் தடுப்பூசி
2023-01-13 19:58:11

சீனாவின் தடுப்பூசிகள் பற்றிய சில மேலை நாட்டு ஊடகங்களின் கருத்துக்கள் குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 13ஆம் நாள் கூறுகையில், சீனாவின் தடுப்பூசிகள் பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் உள்ளன என்பதை நடைமுறைகள் நிரூபித்துள்ளன என்று தெரிவித்தார்.

உலகளவில் பல தொழில் நுட்ப நெறிமுறைகளில் தயாரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகளைக் கொண்டுள்ள ஒரேயொரு நாடாக சீனா திகழ்கிறது. இதன் மூலம், பொது மக்களின் அடிப்படை மற்றும் வலுவூட்டல் நோய் எதிர்ப்புக்கு பல தெரிவுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது 4 தொழில் நுட்ப நெறிமுறைகளைச் சேர்ந்த 13 வகைகளிலான தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தடுப்பூசிகள் போடப்பட்ட விகிதம் மிக அதிகம். எந்த வகையிலான தடுப்பூசியும், கடும் நோய் மற்றும் உயிரிழப்புக்கு எதிரான பாதுகாப்பு திறனைக் கொண்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் பொறுப்பாளர் ஒருவர் அண்மையில் தெரிவித்தார்.

மேலும், உயிரணுவின் நோய் தடுப்பு ஆற்றலையும் நோய் தடைக் காப்பு நினைவையும் சீனாவின் செயலற்ற வைரஸ் கொண்ட தடுப்பூசி செவ்வனே ஊக்குவிக்க முடிகிறது. இது, நோய் தொற்று, கடும் நோய் மற்றும் உயிரிழப்பு தடுப்பில் முக்கியப் பங்காற்றியுள்ளது என்று அவர் கூறினார்.