தித்திக்கும் கரும்பு... தித்திக்கும் வாழ்க்கை!
2023-01-13 17:41:13

சீனாவின் குவேய்சோ மாநிலத்தில் நன்பேன்ஜியாங்கின் கிராமத்தில்  பணப் பயிரான கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. அங்கு கிட்டதட்ட 700 ஹெக்டர் நிலப்பரப்புடைய இந்த கரும்பு வயலில் இருந்து ஆயிரக்கணக்கான டன் நாட்டுசர்க்கரை தயாரிக்க முடியும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் 10 கோடிக்கும் மேலான மதிப்புடைய சர்க்கரை இங்கு உற்பத்தி செய்யப்படும். தித்திக்கும் கரும்பு உள்ளூர் கிராம மக்களின் வாழ்க்கையில் தித்திப்பைக் கொண்டு வந்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில்,  கோவிட்-19 தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டையும் பொருளாதார சமூக வளர்ச்சியையும் ஒன்றிணைத்து, சீனா வறுமை ஒழிப்புத் துறையில் பெரிய முன்னேற்றம் படைத்து, குறிப்பிட்ட வசதியான சமூகம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது,  கிராமங்கள் புத்துயிர் பெறும் விதமான வளர்ச்சியை முன்னெடுத்து வருகிறது.  குறிப்பாக,  சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டில் வழங்கப்பட்ட அறிக்கையில் கிராம வளர்ச்சி குறித்த பல ஆதரவுக் கொள்கைகள் அடக்கம்.