2023இல் உலகப் பொருளாதார வளர்ச்சி 2.7விழுக்காடு:IMF கணிப்பு
2023-01-13 13:08:08

2023ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் 2.7விழுக்காடு வளர்ச்சியடையும் என்ற கணிப்பை சர்வதேச நாணய நிதியம் குறைக்க போவதில்லை என்று அதன் தலைமை இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  

2023ஆம் ஆண்டில் பண வீக்க விகிதம் தொடர்ந்து உயர்வாக இருக்கும். உலகப் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மெதுவாக இருக்கும். ஆனால், தொழிலாளர் சந்தை வலுவாக நிலைநிறுத்தும் என்று ஜார்ஜிவா கூறினார்.