சீன-அமெரிக்க வர்த்தக உறவு பற்றிய சீனாவின் கருத்து
2023-01-13 19:59:35

சீன வணிக அமைச்சர் வாங் வென்தாவ், அமெரிக்க-சீன வர்த்தகக் கவுன்சிலின் தலைவர் ஆலனுடன் ஜனவரி 12ஆம் நாள் காணொளி வழியாகச் சந்திப்பு நடத்தினார். சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தக உறவு, சீனாவின் திறப்பு விரிவாக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் கருத்துக்களைப் பரிமாற்றினர். வாங் வென்தாவ் கூறுகையில், சீன வளர்ச்சி, அமெரிக்காவுக்கும் உலகத்துக்கும் வழங்கிய வாய்ப்புகளை அமெரிக்கா சரியாக அணுகி, இரு நாட்டுத் தலைவர்களின் வழிக்காட்டலைப் பின்பற்றி, இரு நாட்டுறவை சரியான திசைக்கு முன்னேற்ற வேண்டும் என்றார்.