வெற்றிகரமாக ஏவப்பட்ட ஆப்ஸ்டார்--6இ செயற்கைக்கோள்
2023-01-13 12:02:03

சீனாவின் சிச்சாங் செயற்கைக் கோள் ஏவு மையத்திலிருந்து, லாங்மார்ச்--2சி ஏவூர்தி மூலம், ஆப்ஸ்டார்--6இ செயற்கைக்கோள் 2023ஆம் ஆண்டின் ஜனவரி 13ஆம் நாள் 2:10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இது தடையின்றி திட்டமிட்ட சுற்று வட்டப் பாதையில் நுழைந்துள்ளது. இச்செயற்கைக்கோள் முக்கியமாக தென்கிழக்கு ஆசியாவிற்கான உயர்-செயல்திறன் தகவல் தொடர்பு சேவைகளை வழங்க பயன்படுத்தப்படும்.