சீனாவின் ஏற்றுமதி இறக்குமதியின் வளர்ச்சி
2023-01-13 17:28:00

சீன சுங்க துறை தலைமை பணியகத்தின் செய்திதொடர்பாளர் லியு டாலியாங் 13ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில்,

2022ஆம் ஆண்டு சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் மொத்த தொகை 42 இலட்சத்து 7ஆயிரம் கோடி யுவானாகும். இது 2021ஆம் ஆண்டை விட 7.7 விழுக்காடு அதிகரித்ததோடு, வரலாற்றில் புதிய பதிவையும் உருவாக்கியது. இறக்குமதி மற்றும் ஏற்றுமதியின் அளவு, தரம் மற்றும் பலன் ஒரே காலத்தில் உயர்ந்ததோடு, வெளிநாட்டு வர்த்தகம் நிதானமாக அதிகரித்து வந்தது. கடந்த ஆண்டு 5 இலட்சத்து 10 ஆயிரம் தனியார் தொழில் நிறுவனங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொகை 21 இலட்சத்து 40 ஆயிரம் கோடி யுவான்.  இத்தொகை நாட்டின் மொத்த வெளிநாட்டு வர்த்தக தொகையில் பாதியளவைத் தாண்டியுள்ளது இதுவே முதன்முறையாகும். வெளிநாட்டு வர்த்தக அதிகரிப்புக்கு இதன் பங்கு விகிதம் 80.8 விழுக்காடு என்றார்.