சீர்திருத்தத்தின் மூலம் சந்தையின் உயிராற்றலைத் தூண்டிவிட வேண்டும்:லீ கெச்சியாங்
2023-01-13 17:20:36

சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் அண்மையில் தேசிய சந்தை ஒழுங்கு நிர்வாகத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டு, அங்கே கலந்தாய்வு கூட்டம் ஒன்றை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு மற்றும் மத்திய பொருளாதாரப் பணிக் கூட்டத்தின் எழுச்சியைப் பின்பற்றி, சந்தையில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும தனிநபருக்கு ஆதரவான கொள்கைகளின் நடைமுறையாக்கத்தை உறுதி செய்து, பெரும் முயற்சியுடன் சீர்திருத்தம் மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றும், வேலை வாய்ப்பு மற்றும் விலைவாசியை நிலைநிறுத்தி, பொருளாதாரம் நிதானமாக வளர்ந்து நியாயமான வரம்புக்குள் இயங்கி வருவதை முன்னேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், நடைமுறைக்கிணங்க வாழ்க்கைச் சேவை மற்றும் நுகர்வு நடவடிக்கையின் மீட்சியை ஊக்குவிக்க வேண்டும். பல்வகை தொழில் நிறுவனங்களின் சொத்துரிமையைச் சட்டப்படி பாதுகாத்து, அரசு சாரா தொழில் நிறுவனங்களின் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். சந்தையின் உயிராற்றல் மற்றும் சமூகத்தின் புத்தாக்கத்தை பெருமளவில் தூண்டிவிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.