தொற்றுநோய் தகவல்கள் மற்றும் வைரஸ் தரவுகளைச் சர்வதேச சமூகத்துடன் வெளிப்படையாக அமெரிக்கா பகிர்ந்து கொள்ள வேண்டும்
2023-01-14 19:46:30

ஒமைக்ரான் திரிபைச் சேர்ந்த எக்ஸ்பிபி 1.5 வகை இதுவரை மிகவும் வேகமாகப் பரவும் வகையாகும் என்று உலகச் சுகாதார அமைப்பு கருத்து தெரிவித்தது. இந்த வைரஸ் அதிகமான மக்களை பாதிக்கக் கூடும் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

GISAID கண்காணிப்பின் படி, எக்ஸ்பிபி 1.5 வகையான முதலாவது மாதிரி கடந்த ஆண்டு அக்டோபரின் பிற்பகுதியில் நியூயார்க் மற்றும் கனெக்டிகட்டில் காணப்பட்டது. தற்போது, இந்த வைரஸ் அமெரிக்காவில் வேகமாகப் பரவி வருகின்றது. இதுவரை குறைந்தது 74 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் அமெரிக்காவில் பரவல் செய்த கரோனா தொற்றில் தொடர்ச்சியாகப் புது மாற்று வகைகள் தோன்றி வருகின்றன. உண்மையான மிகப்பெரிய வைரஸ் பரவும் நாடாக மாறியுள்ளது. ஆனால், இந்த 3 ஆண்டுகளில், தொற்றுநோய் தகவல்களை வெளியிடுவதில் அமெரிக்கா நேர்மையாகவும் ஒத்துழைப்பாகவும் செயல்படவில்லை. மேலும், பொறுப்பற்றதாக இருந்து வருகின்றது. அமெரிக்காவில் எக்ஸ்பிபி 1.5 வகை ஏன் இவ்வளவு பெரிய தொற்றை ஏற்படுத்தியது? தொற்றுநோய் தகவல்கள் மற்றும் வைரஸ் தரவுகளை உலகச் சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச சமூகத்துடன் அமெரிக்கா காலதாமதமின்றி வெளிப்படையாகவும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.