கடல்கடந்த எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு முதலீட்டுக்கான கட்டமைப்பை இறுதி செய்தது இலங்கை
2023-01-14 17:39:10

கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு முதலீடுகளுக்கான சட்ட கட்டமைப்பை இறுதி செய்யும் அரசிதழில் கையெழுத்திட்டுள்ளதாக இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி ஆணையம், பொருத்தமான முதலீட்டாளர்களுடன் நாடு முழுவதிலும் அடையாளம் காணப்பட்டுள்ள எரிவாயு மற்றும் எண்ணெய் சாத்தியமான இடங்களில் உள்ள சுமார் 900 தொகுதிகளில், ஆராயும் பணியை மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அரசிதழின்படி, ஆர்வமான உள்ள முதலீட்டாளர்கள் எவரும், உத்தேச வேலைத் திட்டம் மற்றும் வேலையை முடிப்பதற்கான எதிர்பார்க்கப்படும் காலக்கெடுவுடன் இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி ஆணையத்தின் பொது இயக்குனரிடம் தங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.