இஸ்லாமிய மதவாதிகள் சின்ச்சியாங்கில் பயணம்
2023-01-14 18:12:38

ஜனவரி 8ஆம் நாள் முதல் 11ஆம் நாள் வரை, உலக முஸ்லிம் சங்கச் செயற்குழுவின் தலைவர் ஆலி, உலகளவில் புகழ் பெற்ற இஸ்லாமிய மதவாதிகள் மற்றும் அறிஞர்கள் குழுவுக்குத் தலைமை தாங்கி, சீனாவின் சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தில் பயணம் மேற்கொண்டார். அரபு அமீரகம், எகிப்து, சௌதி அரேபியா, இந்தோனேசியா முதலிய 14 நாடுகளைச் சேர்ந்த 30க்கும் மேலான மதவாதிகளும் அறிஞர்களும் இக்குழுவில் இடம்பெற்றனர்.

பயங்கரவாத எதிர்ப்பு, தீவிரவாத ஒழிப்பு முதலிய துறைகளில் சின்ச்சியாங் மாபெரும் முன்னேற்றங்களைப் படைத்துள்ளது என்று இக்குழுவினர்கள் கருத்து தெரிவித்தனர். சின்ச்சியாங் பிரதேசத்தில் மத சுதந்திரக் கொள்கையின் செயலாக்கத்தை அவர்கள் வெகுவாகப் பாராட்டினர்.