வெற்றிகரமாக ஏவப்பட்ட சிலு-2/3 செயற்கைக்கோள் உள்ளிட்ட 14 செயற்கைக்கோள்கள்
2023-01-15 16:42:21

சீனாவின் தையுவான் செயற்கைக் கோள் ஏவு மையத்திலிருந்து, லாங்மார்ச்—2டி ஏவூர்தி மூலம், சிலு-2/3 செயற்கைக்கோள், லுயோ ஜியா-3 01 செயற்கைக்கோள், ஜிலின்-1 03 டி 34 செயற்கைக்கோள் முதலிய 14 செயற்கைக்கோள்கள் 2023ஆம் ஆண்டின் ஜனவரி 15ஆம் நாள் 11:14 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டன. அவை தடையின்றி திட்டமிட்ட சுற்று வட்டப் பாதையில் நுழைந்துள்ளன. இக்கடமை முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளது.

லாங்மார்ச் ஏவூர்திகள் தொகுதியின் 462வது பறத்தல் கடமை இது என்பது குறிப்பிடத்தக்கது.