தமிழகத்தில் சர்வதேச புத்தக கண்காட்சி தொடங்க உள்ளது!
2023-01-15 16:47:02

தமிழகத்தில் முதன்முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி, சென்னையில் ஜனவரி 16 முதல் 17 ஆம் நாள் வரை நடைபெற உள்ளது.

இப்புத்தக கண்காட்சியின் தொடக்க விழாவில், தமிழக முதல்வர், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர், பல்வேறு நாடுகளின் தூதர்கள்  மற்றும் எழுத்தாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இப்புத்தக கண்காட்சியில் 30க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.