நேபாளத்தில் பயணியர் விமானம் விழுந்து நொறுங்கியது
2023-01-15 16:44:23

நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவிருந்து பொக்ராவுக்குச் சென்ற ஏடீஆர்-72 ரக பயணியர் விமானம், 15ஆம் நாள் காலை விழுந்து நொறுங்கியது. இவ்விமானத்துடன் 68 பயணிகள் மற்றும் 4 விமானப் பணியாளர்கள் பயணித்தனர். இவ்விபத்து ஏற்பட்ட இடம் வெயிலாக இருந்தது என்று புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் காட்டுகின்றன.

தற்போது பொக்ரா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. ஹெலிகோப்டர் மூலம் மீட்புப் பணியாளர்களை அவ்விடத்துக்கு அனுப்பியதாக நேபாள அரசு தெரிவித்தது. விபத்து நிகழ்விடத்தில் குறைந்தபட்சம் 40 பூதவுடல்கள் கண்டுபிடிக்கப்படுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.