2022 டிசம்பரில் இலங்கையின் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு
2023-01-15 16:47:41

2022 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில், வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கை தொழிலாளர்கள் நாட்டிற்கு 47.56 கோடி அமெரிக்கா டாலர்களை அனுப்பியுள்ளனர் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார சனிக்கிழமை தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டில், இலங்கை தொழிலாளர்கள் 2021 ஆம் ஆண்டை விட 31 விழுக்காடு குறைவான பணத்தை அனுப்பியுள்ளனர் என்று மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. 

2021 ஆம் ஆண்டில், இலங்கைத் தொழிலாளர்கள் 549 கோடி அமெரிக்கா டாலர்களை அனுப்பியுள்ளனர். 2022 ஆம் ஆண்டில் சுமார் 380 கோடி அமெரிக்கா டாலர்களை அனுப்பியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கான வெளிநாட்டு வருமானத்தின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக தொழிலாளர்களின் பணம் அனுப்புதல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.