எகிப்து அரசுத் தலைவருடன் ச்சின்காங் சந்திப்பு
2023-01-16 10:04:25

எகிப்து அரசுத் தலைவர் அப்தெல்பத்தா அல் சிசி, கெய்ரோவில் பயணம் மேற்கொண்ட சீன வெளியுறவு அமைச்சர் ச்சின் காங்வுடன் ஜனவரி 15ஆம் நாள் சந்திப்பு நடத்தினார்.

சிசி கூறுகையில், ஒரே சீனா என்ற கோட்பாட்டை எகிப்து தொடர்ந்து கடைப்பிடித்து, சீன உள்விவகாரத்தில் வெளிப்புறச் சக்திகள் தலையிடுவதை உறுதியாக எதிர்க்கிறது. மேலும், மேலதிக சீனத் தொழில் நிறுவனங்கள் எகிப்தில் முதலீடு செய்வதை வரவேற்கிறோம். சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்களில் சீனாவுடன் ஒத்துழைப்புகளையும், அரபு-சீன மற்றும் ஆப்பிரிக்க-சீன ஒத்துழைப்புகளையும் வலுப்படுத்த விரும்புகின்றோம் என்று தெரிவித்தார்.

ச்சின் காங் கூறுகையில், இரு நாட்டு அரசுத் தலைவர்களின் நெருங்கிய தொடர்பு, சீன-எகிப்து பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவுக்கு வலுவான இயக்காற்றலை ஊட்டியுள்ளது. இரு தரப்புகள் தத்தமது வளர்ச்சித் திட்டங்கள் குறித்து நெருக்கமாகத் தொடர்பு மேற்கொண்டு, முக்கிய ஒத்துழைப்புத் திட்டப்பணிகளை வெகு விரைவில் முன்னேற்றுவதை எதிர்பார்த்துள்ளோம் என்று தெரிவித்தார்.

இச்சந்திப்புக்கு பிறகு, எகிப்து வெளியுறவு அமைச்சர் சமே ஹாசன் சௌக்ரியுடன் ச்சின்காங் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.