அரபு லீக்கின் தலைமைச் செயலாளருடன் சின் கங் பேச்சுவார்த்தை
2023-01-16 10:06:06

சீன வெளியுறவு அமைச்சர் சின் கங் ஜனவரி 15ஆம் நாள் கெய்ரோவில் அரபு லீக்கின் தலைமைச் செயலாளர் அஹமது அபௌல் ஹெய்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சின் கங் கூறுகையில், கடந்த மாதம் வெற்றிகரமாக நடத்தப்பட்ட முதலாவது சீனா-அரபு நாடுகள் உச்சிமாநாட்டில், செழிப்பான சாதனைகள் கிடைத்தன. அரபு நாடுகளுடன் இணைந்து நட்புறவைப் பின்பற்றி இம்மாநாட்டின் சாதனைகளைச் சீராகச் செயல்படுத்தி, 8 முக்கிய பொது நடவடிக்கைகளின் நடைமுறையாக்கத்தை விரைவுபடுத்தி, இருதரப்புகளின் மக்களுக்கு நன்மை புரிய சீனா விரும்புகிறது. அரபு லீக்குடன் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, வளரும் நாடுகளின் நியாயமான உரிமை நலன்களையும், சர்வதேச நீதி நியாயத்தையும் கூட்டாகப் பேணிக்காக்கச் சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.

ஹெய்த் கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முதலாவது சீனா-அரபு நாடுகள் உச்சிமாநாட்டில் நிகழ்த்திய உரை அரபு நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது என்று தெரிவித்தார். மேலும், நீண்டகாலத்தில் சர்வதேச சமூகத்தில் நியாயத்தை ஆதரித்து, அரபு நாடுகளின் வளர்ச்சிக்கும் அரபு லீக்கின் ஒற்றுமைக்கும் ஆதரவளித்து, நோய் தொற்று தடுப்பில் அரபு நாடுகளுக்கு உதவியளித்து வரும் சீனாவுக்கு நன்றி தெரிவித்ததோடு, பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, பிரதேசத்தின் அமைதி மற்றும் நிலையான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.