கடல் பனி உடைக்கும் செயல்பாட்டைக் கொண்ட சீனாவின் முதலாவது பெரிய கப்பல்
2023-01-16 17:41:54

ஜனவரி 16ஆம் நாள் கடலின் பனிக்கட்டிகளை உடைக்கும் திறனைக் கொண்ட சீனாவின் முதலாவது பெரிய ஹைக்சுன் 156 கப்பல் அதிகாரப்பூர்வமாக தியான்ஜினில் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது.

இக்கப்பல் மொத்த நீளம் 74.9 மீட்டர், அகலம் 14.3 மீட்டர், எடை 2,400 டன்னாகும். நுண்ணறிவு மற்றும் பராமரிப்புத் திறன் கொண்ட இக்கப்பல் முழுமையாக மின்சாரத்தால் இயக்கப்படுகிறது. வடக்கு பிரதேசத்திலுள்ள துறைமுகங்களில் உற்பத்தி மற்றும் எரிசக்தி போக்குவரத்து, சீரான விநியோகத்தை உறுதி செய்வதில் இக்கப்பல் முக்கிய பங்காற்றுகின்றது.