அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிப்ரவரியில் சீனாவில் பயணம்
2023-01-17 18:53:43

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் பிப்ரவரியில் சீனாவில் பயணம் மேற்கொள்வது குறித்து சீனாவும் அமெரிக்காவும் விவாதித்து வருகின்றன என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் 17ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்தல், சமாதான சக வாழ்வு, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி பெறுதல் ஆகிய மூன்று கோட்பாடுகளுக்கு ஏற்ப எப்போதும் சீன-அமெரிக்க உறவுகளைச் சீனா வளர்த்து வருகிறது. மேலும் அமெரிக்கா சீனாவைப் பற்றிய சரியான புரிதல் கொண்டு, இரு நாட்டு உறவு சீரான நிதானமான வளர்ச்சிப் பாதைக்கு மீண்டும் திரும்புவதை முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.