பாதுகாப்பான பயனுள்ள சீன தடுப்பூசிகள்
2023-01-17 11:05:44

சீன கரோனா தடுப்பூசிகள் பற்றி அமெரிக்க ஊடகங்கள் நிறைய தவறான தகவல்களைப் பரப்பின என்று அமெரிக்க தேசிய பொது வாணொலி நிலையம் அண்மையில் யேல் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார கழகத்தின் துணை பேராசிரியர் ஒருவரின் கருத்தை மேற்கோள் காட்டி தெரிவித்தது.

கோவிட்-19 நோய் தொற்று சமாளிப்பு கொள்கையை சீனா மாற்றியுள்ளது. இதற்கு உலகம் முழுவதும் வரவேற்பு தெரிவித்துள்ளன. ஆனால் சில அமெரிக்க அரசியல்வாதிகளும் செய்தி ஊடகங்களும் சீன கரோனா தடுப்பூசிகள் பற்றி அவதூறு பரப்பி வருகின்றனர்.

சீனாவின் தடுப்பூசி நல்லதா இல்லையா என்பதை அறிவியலைப் பின்பற்றி தீர்மானிக்க வேண்டும். உலகில், பல்வகை தொழில் நுட்ப நெறிகளின் மூலம் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளைக் கொண்டுள்ள ஒரே ஒரு நாடாக சீனா விளங்குகின்றது. 4 தொழில் நுட்ப நெறிகளைச் சேர்ந்த 13 வகைகளிலான தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு சீனா அனுமதி அளித்துள்ளது.

சீனாவின் 3 வகை கரோனா தடுப்பூசிகளை அவசர பயன்பாட்டு பெயர் பட்டியலில் உலக சுகாதார அமைப்பு சேர்த்துள்ளது. சீன தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு 100க்கும் மேலான நாடுகள் அனுமதி அளித்துள்ளன. துருக்கி, அரபு அமீரகம், சிலி உள்ளிட்ட 30க்கும் மேலான நாடுகளின் தலைவர்கள் சீன தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனர். வயது குறைந்த குழந்தைகளுக்கான ஒரே ஒரு தடுப்பூசியாக சீன தடுப்பூசியை பல நாடுகள் தேர்ந்தெடுத்துள்ளன. சீன தடுப்பூசிகளை சர்வதேச சமூகம் நம்புகின்றது என்பதை இவை வெளிக்காட்டியுள்ளன.

சில அமெரிக்கர்கள், அமெரிக்க தடுப்பூசியின் பயன்களைப் பறைச்சாற்றினர். ஆனால், XBB.1.5 எனும் வைரஸ் திரிபு அமெரிக்காவில் பெருமளவாக பரவி வருவதற்குக் காரணம் என்ன?

அறிவியலை மீறி, உண்மைகளை அலட்சியம் செய்து அவதூறுகள் பரப்புவதை குறிப்பிட்ட அமெரிக்கர்கள் கைவிட்டு, அமெரிக்காவின் நோய் தொற்று தடுப்பு பிரச்சினையை சரிவர் பார்க்கவும், கரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக கொடுக்கும் வாக்குறுதியை வெகுவிரைவில் நிறைவேற்றவும் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.