அமெரிக்காவில் இனவெறி பாகுபாட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்
2023-01-17 17:35:21

இவ்வாண்டு ஜனவரி 16ஆம் நாள் மார்ட்டின் லூதர் கிங் தினத்தையொட்டி, இனவெறி பாகுபாட்டை எதிர்த்து, அமைதி மற்றும் நீதிக்கு ஆதரவு அளிக்கும் வகையில், ஆர்ப்பாட்டம், குடியிருப்புப் பகுதிகளின் சமூக பொது சேவை முதலிய பல்வேறு நடவடிக்கைகள் கடந்த சில நாட்களில் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன.

நீண்டகாலமாக, அந்நாட்டுக் காவற்துறையினர் வன்முறையுடன் சட்டத்தை அமல்படுத்தி வருகின்றனர். பல ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் வெள்ளை காவற்துறையினரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மார்ட்டின் லூதர் கிங் தனது புகழ்பெற்ற“எனக்கு ஒரு கனவு உண்டு”என்ற உரையில் குறிப்பிட்டுள்ள தேசிய இன சமத்துவத்தின் கனவு நனவாக்குவதற்கு இன்னும் நீண்டகால அவகாசம் தேவைப்படுகின்றது என்று பல ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் தெரிவித்துள்ளனர்.