இலங்கையில் குறைந்த வருமானம் கொண்ட 20 லட்சம் குடும்பங்களுக்கு அரிசி விநியோகம்!
2023-01-17 10:22:06

இலங்கையில் 10 கிலோ அரிசியை திங்களுக்கு ஒரு முறை, குறைந்த வருமானம் கொண்ட 20 லட்சம் குடும்பங்களுக்கு  இரண்டு மாதங்களுக்கு வழங்கும் என இலங்கை அரசுத்தலைவரின் ஊடகப் பிரிவு திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கையில் 60 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக ஐ.நாவின் உலக உணவுத் திட்ட அலுவலகம் கடந்த ஆண்டின் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது.   

குறைந்த உள்நாட்டு விவசாய உற்பத்தி, அந்நியச் செலாவணி கையிருப்பு பற்றாக்குறை மற்றும் உள்ளூர் நாணயத்தின் தேய்மானம் ஆகியவை உணவுப் பற்றாக்குறை மற்றும் வாழ்க்கைச் செலவீனங்களின் அதிகரிப்பை ஏற்படுத்தியதாக இந்த அலுவலகம்  கூறியது என்பது  குறிப்பிடத்தக்கது.