சீனாவில் வணிகச் சூழலுக்கு அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் மனநிறைவு
2023-01-17 12:41:27

சர்வதேச வர்த்தக முன்னேற்றத்துக்கான சீனக் கவுன்சில் ஜனவரி 17ஆம் நாள் நடத்தியசெய்தியாளர் கூட்டத்தில் 2022ஆம் ஆண்டின் 4வது காலாண்டில் சீனாவில் அந்நிய முதலீட்டுச் சூழலுக்கான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. சீனாவில் வணிகச் சூழலின் மீது அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் மனநிறைவு கொள்கின்றன என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டு, நிறுவனங்களை நிறுவுவது மற்றும் விலக்குவது, அடிப்படை வசதிகள் ஆகிய துறைகளில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் மிகப் பெரும் ஆதாய உணர்வு பெற்றுள்ளன. அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தில் போக்குவரத்து குறியீடு பற்றிய மதிப்பீடு அதிக அளவில் உயர்ந்துள்ளது.