டாஷிங் விமான நிலையத்தின் சர்வதேச மற்றும் பிரதேசப் பயணச் சேவை மீண்டும் துவக்கம்
2023-01-17 11:19:29

பெய்ஜிங் டாஷிங் விமான நிலையத்தின் சர்வதேச மற்றும் பிரதேசப் பயணச் சேவை ஜனவரி 17ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக மீண்டும் துவங்கியுள்ளது.

4 சர்வதேச மற்றும் பிரதேச விமான வழித்தடங்கள் முதலில் மீண்டும் துவங்கத் திட்டமிட்டப்பட்டுள்ளது. மேலதிக தொலைதூர வழித்தடங்கள் பிறகு போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்படும்.

விமான நிறுவனங்களின் இணையதளத்திலும், நேரடி தொலைபேசி சேவையின் வழியிலும், சீனாவுக்கு அப்பாலுள்ள வைரஸ் கட்டுப்பாட்டுக் கொள்கைகளைப் பயணிகள் அறிந்து கொள்ளலாம்.