சில நாடுகளின் பாகுபட்டு நடவடிக்கைகளை விரைவில் அகற்ற வேண்டும்
2023-01-18 19:18:01

ஒரு சில நாடுகள் அறிவியல் மற்றும் உண்மைகளை மீறி சீன பயணிகளின் மீது பாகுபாடுத்தன்மை வாய்ந்த எல்லை நுழைவு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இந்த நாடுகளில் அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய மூன்று நாடுகளும் பிரதிநிதி நாடுகளாகும்.

ஜப்பான், தென் கொரியா, சீனா ஆகியவை நெருங்கிய அண்டை நாடுகளாகும். அவற்றுக்குமிடையில் நெருக்கமான பொருளாதார உறவுகளும் உள்ளன. இதனைக் கருத்தில் கொண்டால், சாதாரண மனிதப் பரிமாற்றங்களைச் சீனா மீண்டும் மீட்பதை அந்த நாடுகள் வரவேற்பது இயல்பே. ஆனால், கூறப்படும் இந்தோ-பசிபிக் நெடுநோக்கை முன்னேற்றுவதை அமெரிக்கா தீவிரமாக்கும் சூழலில், ஆசியாவில் அமெரிக்காவின் முக்கிய கூட்டணி நாடுகளான அவை, அமெரிக்காவுடன் இணைந்து சீன சுற்றுலாப் பயணிகளின் மீது எல்லை நுழைவு தடை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

உண்மையில், ஜப்பானின் சுகாதாரம், உழைப்பு மற்றும் சமூக உத்தரவாத அமைச்சகம் வெளியிட்ட தகவல்களின் படி, ஜனவரி 12ஆம் நாள் முடிவடைந்த ஒரு வாரத்தில் சீனாவிலிருந்து வரும் பயணிகளில் கரோனா வைரஸால் பாதிக்கப்படோரின் விகிதம் 3 விழுக்காடு மட்டுமே ஆகும்.  

தொற்றுநோயின் புதிய சூழ்நிலையை எதிர்கொண்டு, ஜப்பான், தென் கொரியா முதலிய நாடுகள் அறிவியலை மதிக்க வேண்டும். பாகுபாடுத்தன்மை வாய்ந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை விரைவில் அகற்றி, இயல்பான மனிதப் பரிமாற்றங்களை மீண்டும் தொடங்க வேண்டும்.