உலகில் மிகப் பெருமளவு பொருளாதார அதிகரிப்பு-சீனா
2023-01-18 14:29:52

சீன தேசிய புள்ளிவிவரப் பணியகம், 2022ஆம் ஆண்டு பொருளாதாரத் தரவுகளை 17ஆம் நாள் வெளியிட்டது. கடந்த ஆண்டு சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 1 கோடியே 21 இலட்சத்து 2070 கோடி யுவானாகும். இது 2021ஆம் ஆண்டை விட 3 விழுக்காடு அதிகம்.

2020, 2021 ஆகிய ஆண்டுகளில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு முறையே 1 கோடி கோடி யுவானையும், 1 கோடியே 10 இலட்சம் கோடி யுவானையும் தாண்டியது நினைவுகூரத்தக்கது.

புவிசார் அரசியல் நெருக்கடி, உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கான வாய்ப்பு அதிகரிப்பு, உள்நாட்டில் கரோனா வைரஸ் பரவி வருவது ஆகிய காரணங்களுக்கு மத்தியில் சீனப் பொருளாதாரம் இத்தகைய வளர்ச்சியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

2022ஆம் ஆண்டில் சீனப் பொருளாதாரத்தின் 3 விழுக்காடான அதிகரிப்பு, இதர முக்கிய பொருளாதாரச் சமூகங்களை விட அதிகமானது. சீன பொருளாதாரத்தின் உறுதியையும் உயிராற்றலையும் இது வெளிகாட்டுகிறது. சீனாவில் நோய் தொற்று பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேம்பட்டுள்ளதோடு, சீனப் பொருளாதாரத்தின் உயிராற்றலும் மேலும் வெளிக்கொணரப்படுகிறது.