ஹெலிகாப்டர் விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் பலி
2023-01-18 17:44:51

உக்ரைனின் கீவ் மாநிலத்துக்கு அருகில் ஒரு ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாக உள்ளூர் செய்தி ஊடகம் 18ஆம் நாள் கூறியது.

உள்துறை அமைச்சர் மற்றும் துணை அமைச்சர் விபத்தில் பலியாயினர் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

உக்ரைன் விமானப்படைத் தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் இது பற்றி கூறுகையில்,

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் உக்ரைன் தேசிய அவசர விவகாரப் பணியகத்தைச் சேர்ந்தது. விபத்தின் போது இது கடமையில் ஈடுபட்டிருந்ததாக கூறப்பட்டது.