உலகப் பொருளாதார மன்றக்கூட்டத்தில் லியூ ஹே பங்கெடுப்பு
2023-01-18 10:17:36

தாவோஸில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்றத்தின் 2023ஆம் ஆண்டுக்கூட்டத்தில் சீனத் துணைத் தலைமையமைச்சர் லியூ ஹே ஜனவரி 17ஆம் நாள் உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. இம்மாநாட்டின் கோரிக்கையின்படி, அண்மையில் நடைபெற்ற சீன மத்தியப் பொருளாதாரப் பணிக்கூட்டத்தில், 2023ஆம் ஆண்டு பொருளாதாரப் பணிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முயற்சியுடன், இவ்வாண்டு சீனப் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடையும். மேலும், சீனாவின் நிதி அமைப்புமுறை சீரான நிலையில் உள்ளது என்றார்.

இக்கூட்டத்தின்போது, குறிப்பிட்ட நாடுகளின் அரசியல் தலைவர்கள், அறிஞர்கள், தொழில் முனைவோர்கள் முதலியோருடன் லியூ ஹே சந்திப்பு நடத்த உள்ளார்.