சீனப் பிரதிநிதி குழு இலங்கையில் பயணம்
2023-01-18 18:34:39

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிநாட்டுத் தொடர்புத் துறை துணை அமைச்சர் ச்சேன் ச்சோ தலைமையில், சீனப் பிரதிநிதி குழு ஜனவரி 14ஆம் நாள் முதல் 18ஆம் நாள் வரை இலங்கையில் பயணம் மேற்கொண்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாட்டின் எழுச்சி தொடர்பான பரப்புரை கூட்டத்தை நடத்தியது. இலங்கை அரசுத் தலைவர் விக்ரமசிங்கே, தலைமை அமைச்சர் குனவர்டானா முதலியோர், சீனப் பிரதிநிதி குழுவினர்களைச் சந்தித்துரையாடினர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு, வருங்கால வளர்ச்சி இலக்குகளை முன்வைத்துள்ளது. இலங்கை, இந்த இலக்குகளிலிருந்து நலன் பெற வேண்டும் என்று இலங்கை தரப்பினர்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.