புதிய ஆண்டில் சீனப் பொருளாதாரத்தின் மாபெரும் வளர்ச்சி
2023-01-18 17:40:22

2022ஆம் ஆண்டு சீனத் தேசிய பொருளாதாரம் குறித்த தரவுகளைச் சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் அண்மையில் வெளியிட்டது. புதிய ஆண்டில் சீனப் பொருளாதாரம் ஒட்டுமொத்த முன்னேற்றத்தைப் பெறுவது உறுதி. இது உலகப் பொருளாதாரத்திற்கு மேலதிகப் பங்காற்றும் என்று நம்புவதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் 18ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

2022ஆம் ஆண்டில் தொற்றுநோயின் தொடர்ச்சியான பாதிப்பு, உலகப் பொருளாதாரத்தில் தொடர்ச்சியான வீழ்ச்சி ஆகிய சூழ்நிலையில், தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டையும் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியையும் சீனா பயனுள்ள முறையில் ஒருங்கிணைந்துள்ளது. மொத்த பொருளாதார அளவும் தனிநபர் நிலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறன என்றும் அவர் தெரிவித்தார்.