பேச்சுவார்த்தை மூலம் உக்ரைன் நெருக்கடியைத் தீர்க்க வேண்டும்:சீனப் பிரதிநிதி
2023-01-18 10:21:53

ஐ.நா. பாதுகாப்பவையில் உக்ரைன் விவகாரம் குறித்த பரிசீலனையின் போது, ஐ.நாவுக்கான சீனாவின் துணை நிரந்தர பிரதிநிதி டாய் பிங் கூறுகையில், மோதல் மற்றும் எதிரெதிர் செயலில் வெற்றி பெறுபவர் எவரும் இல்லை. உக்ரைன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை தான் நடைமுறையில் பயன் தரும் வழிமுறை என்று தெரிவித்தார்.

உக்ரைன் நெருக்கடி மூண்டது முதல் தற்போது வரை, பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. தொடர்புடைய தரப்புகள் பகுத்தறிவு மற்றும் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, பாதுகாப்புத் துறையில் பொது அக்கறை கொண்ட விவகாரத்தை அரசியல் முறையில் தீர்க்கப் பாடுபட வேண்டும் என சீனா விரும்புகிறது. அமைதி பேச்சுவார்த்தையை முன்னேற்றுவதிலும், ரஷியா மற்றும் உக்ரைனை பேச்சுவார்தைக்குத் திரும்ப ஊக்குவிப்பதிலும் சர்வதேச சமூகம் முயற்சியுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.