அமெரிக்காவின் சட்டத்துக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் உரிய நடவடிக்கைகள்
2023-01-18 17:21:01

கடந்த ஆண்டு அமெரிக்கா நிறைவேற்றிய பணவீக்கக் குறைப்பு சட்டம் உள்ளூர் தொழில்களுக்கு அதிக உதவித்தொகை வழங்குவதை உள்ளடக்கியது. இச்சட்டம், வலுவான ஒருதரப்புவாதம் மற்றும் பாதுகாப்புவாதத்தன்மை வாய்ந்தது. இதற்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் 17ஆம் நாள் தெரிவித்தது.

தொழில் நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு உற்பத்தி திறன்களை மாற்றுவதைத் தடுக்கும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் தொடர்புடைய சட்டங்களை இயற்றி, அவற்றுக்கு நிதி உதவியை வழங்கி, ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில்துறை தளங்களில் தொடர்ந்து முதலீடு செய்யும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெலேன் 17ஆம் நாள் டாவோஸில் தெரிவித்தார்.

மேலும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் பொருளாதார மற்றும் நிதி அமைச்சர்கள் 17ஆம் நாள் பிரசல்ஸில் கூட்டத்தை நடத்தி அமெரிக்க பணவீக்க குறைப்பு சட்டம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து முக்கியமாக விவாதித்தனர்.