புதிய யுகத்தில் சீனாவின் பசுமை வளர்ச்சிக்கான வெள்ளை அறிக்கை
2023-01-19 15:42:29

சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் ஜனவரி 19ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், புதிய யுகத்தில் சீனாவின் பசுமை வளர்ச்சிக்கான வெள்ளை அறிக்கை பற்றி அறிமுகம் செய்யப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளில் சீனாவின் பசுமை வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் மற்றும் சாதனைகள் இவ்வறிக்கையில் தொகுக்கப்பட்டு, இவ்வளர்ச்சியின் கருப்பொருட்கள் மற்றும் நடைமுறை அனுபவங்களும் எடுத்துக்கூறப்பட்டுள்ளன.

சீனாவின் பசுமை வளர்ச்சி, சீனா மட்டுமல்லாமல், உலகத்துக்கும் நன்மை புரிந்துள்ளது. பசுமை வளர்ச்சிப் பாதையில் சீனா உறுதியாக ஊன்றி நின்று, உயிரின நாகரிகக் கட்டுமானத்தை முன்னேற்றி வருகிறது என்று இவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உயிரினச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தொடரவல்ல வளர்ச்சி முன்னேற்றம், பல்வேறு நாடுகளின் கூட்டுப் பொறுப்பாகும். சர்வதேச சமூகத்துடன் இணைந்து, மேலும் தூய்மையான மற்றும் அழகான உலகத்தை உருவாக்கச் சீனா விரும்புகிறது என்றும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.