லியு ஹே-யேலன் பேச்சுவார்த்தை
2023-01-19 11:03:33

சீன துணை தலைமை அமைச்சரும் சீன-அமெரிக்க பன்முக பொருளாதார பேச்சுவார்த்தைக்கான சீன தரப்பு பொறுப்பாளருமான லியு ஹே, அமெரிக்க நிதி அமைச்சர் யேலன் அம்மையாருடன் 18ஆம் நாள் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரு நாட்டு அரசுத் தலைவர்கள் பாலி தீவு பேச்சுவார்த்தையின் போது எட்டியுள்ள ஒத்த கருத்துகளின் நடைமுறையாக்கம் மீதான கவனத்துடன், உலகம் மற்றும் இரு நாடுகளின் மொத்த பொருளாதார மற்றும் நிதி நிலைமை, உலகளாவிய பொது  அறைகூவல்களைச் சமாளிப்பது ஆகியவை பற்றி அவர்கள் ஆழமாகவும் நேர்மையாகவும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

தொடரவல்ல நிதி ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்ட இருதரப்பினர், இருதரப்பு, ஐ.நா., ஜி 20, ஏபெக் ஆகிய பலதரப்பு கட்டுக்கோப்புகளுக்குள் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்புக்கொண்டனர்.