பிறரின் கதவை முற்றுகையிட்டால் சொந்த வழியும் மூடப்படும்:சீனா
2023-01-19 17:21:47

அமெரிக்காவின் பணவீக்கக் குறைப்புச் சட்டத்தில் இடம்பெற்ற பாகுபாட்டுத்தன்மை வாய்ந்த வர்த்தகப் பாதுகாப்பு விதிகள் அதன் கூட்டாளி நாடுகள் உள்ளிட்ட பல தரப்புகளின் எதிர்ப்பு மற்றும் விமர்சனத்துக்கு உள்ளாகியருப்பதைச் சீனத் தரப்பு கவனித்துள்ளதாகச் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வேன்பிங் 19ஆம் நாள் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், உலக வர்த்தக அமைப்பின் விதிகளை அமெரிக்கா கண்டிப்பான முறையில் கடைபிடித்து தனது கடமைகளை நிறைவேற்றி, பல தரப்பு வர்த்தக அமைப்புமுறையின் அதிகாரத்தையும் பயன்களையும் பேணிக்காக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். பிறரின் கதவை முற்றுகையிட்டால் சொந்த வழியும் மூடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவும் ஐரோப்பாவும்  இச்சட்டம் பற்றி விவாதம் நடத்தி வருகின்றன. முழு உலகமும் மாபெரும் அறைகூவல்களை எதிர்நோக்கும் பின்னணியில், பாகுபாட்டுத் தன்மை வாய்ந்த மானியம் மற்றும் வரி விலக்குப் பாதையில் அமெரிக்கா தொடர்ந்து நடைபோட்டால் அதிக பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் துணைச் செயல் தலைவர் துங்புரோவ்ஸ்க்கி சுட்டிக்காட்டினார்.