இராணுவப் படைவீரர்களுக்கு ஷிச்சின்பிங் வசந்த விழா வாழ்த்து
2023-01-19 18:49:24

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் 18ஆம் நாள் காணொளி வழியில் படைவீரர்களின் போர் தயார் பணியைச் சோதனை செய்தார். சீன மக்கள் விடுதலைப்படை மற்றும் ஆயுதக்காவற்துறையைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் அதிகாரிகள், இராணுவம் சாரா பணியாளர்கள், மக்கள் படையின் துணைநிலை படைவீரர்கள் ஆகியோருக்குப் புத்தாண்டு வாழ்த்துக்களை அவர் தெரிவித்தார்.