சீனப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்:குட்ரெஸ்
2023-01-19 15:20:48

வசந்த விழாவை முன்னிட்டு, சீன மக்களுக்குப் சீன மொழியில் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை ஐ.நா தலைமைச் செயலாளர் ஆன்டோனியோ குட்ரெஸ் 18ஆம் நாள் காணொளி வழியில் தெரிவித்தார்.  

ஐ.நா.வுடன் சீனா வலுவான கூட்டாண்மை உறவை நிலைநிறுத்துவதற்கும் சர்வதேச ஒத்துழைப்புக்குச் சீனா அளித்த ஆதரவுக்கும் குட்ரெஸ் நன்றி தெரிவித்தார். சர்வதேசச் சமூகத்தின் கூட்டு முயற்சியின் மூலம், அமைதி மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை மேம்படுத்தி, மேலும் அருமையான உலகத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.