சாலை விபத்து குறைப்புக்கு முயற்சி செய்ய வேண்டும்:இந்திய அரசு வேண்டுகோள்
2023-01-19 15:25:31

2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாடளவில் சாலை விபத்துகளை 50 விழுக்காடு குறைப்பதற்கு அனைவரின் முயற்சிகளும் அவசியம் என்று இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி ஜனவரி 18ஆம் நாள் கூறினார்.

இவ்வமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றின்படி, லாரி ஓட்டுநர்களின் வேலை நேரத்தை நிர்ணயிக்கும் விதம் சட்டம் ஒன்று விரைவில் வெளியிடப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

சாலை விபத்து உயிரிழப்பு மற்றும் படுகாயங்களைக் குறைக்கப் பாடுபடுவதாகவும், சாலை பாதுகாப்பு தொடர்பான பொறியியல், சட்ட அமலாக்கம், கல்வி, அவசரச் சிகிச்சை ஆகிய 4 துறைகளிலும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இவ்வமைச்சகம் தெரிவித்துள்ளது.

முழு இந்தியாவிலும் ஆண்டுதோறும் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் 5 லட்சம் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது.