3 ஆண்டுகால நோய்தொற்று தடுப்பில் உலகிற்கு சீனாவின் பங்கு என்ன?
2023-01-20 15:32:46

புதிய ரக கரோனா தொற்றுக்கு எதிரான பி வகையின் பி நிலை கட்டுப்பாடு சீனாவில் நடைமுறைக்கு வந்து 12 நாட்கள் ஆகிறது. நாடு முழுவதிலும் இவ்வைரஸால் ஏற்பட்ட பாதிப்பு, உச்சத்தைக் கடந்து விட்டது. இந்நிலையில் சீன மக்கள் கவலையின்றி வசந்த விழாவை வரவேற்று வருகின்றனர். பல்வேறு இடங்களில் விறுவிறுப்பான காட்சிகள் மீண்டும் காணப்படுவதோடு, பல சீனர்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். நோய் தொற்று பரவலுக்கு எதிராக, சீனா அறிவியல் ரீதியில் துல்லியமான தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதிலிருந்து இச்சாதனை பெறப்பட்டது.

கடந்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு குடிமக்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் உடல்நலத்தையும் சீன அரசு முழுமூச்சுடன் பாதுகாத்து வருகிறது. உலகளாவிய நோய்தொற்று தடுப்பில் இதுதான் ஆக்கப்பூர்வப் பங்காகும். பன்னாட்டுச் சமூகத்துடன் நோய் தொற்று பற்றிய தகவல்களை சீனா வெளிப்படையாக பகிர்ந்து கொண்டு, நோய் தொற்று தடுப்புக்கும், தடுப்பூசி மற்றும் சோதனைப் பொருட்களின் ஆய்வுக்கும் அறிவியல் ஆதாரங்களை வழங்கியுள்ளது.

தற்போது 150க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு 220 கோடி கரோனா தடுப்பூசிகளையும், 153 நாடுகள் மற்றும் 15 சர்வதேச அமைப்புகளுக்கு அதிகமான நோய் தடுப்பு பொருட்களையும் வழங்கியுள்ள சீனா, 34 நாடுகளுக்கு 38 மருத்துவக் குழுக்களையும் அனுப்பியுள்ளது. உலகளாவிய நோய் தொற்று தடுப்பு முயற்சியைக் குறிப்பிட்ட சில மேலை நாடுகள் சிர்குலைக்கும் நிலையில், சீனாவின் செயல்பாடு மதிப்புமிக்கது. மேலும், பாதகமான சூழ்நிலையில், தனது திறப்பு அளவை சீனா தொடர்ந்து ஆக்கமுடன் விரிவாக்கி, உலகின் தொழில் சங்கிலி மற்றும் வினியோகச் சங்கிலியின் நிலைத்தன்மையை வலிமையுடன் பேணிக்காத்து வருகிறது.

மீட்சி அடைந்து வரும் சீனா, உலக நோய் தொற்று தடுப்பைத் தொடர்ந்து முன்னேற்றுவதோடு, உலகப் பொருளாதார மீட்சிக்கும் பங்காற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.