காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நிலக்கரி ஒதுக்கீட்டை நிறுத்த இந்தியா திட்டம்
2023-01-20 18:16:53

இந்தியாவின் தேசிய தலைநகர் மண்டலத்தில் செயல்படும் நிலக்கரி நிறுவனங்களுக்கு, நிலக்கரி ஒதுக்கீட்டை முற்றிலும் நிறுத்த வேண்டுமென இந்திய நிலக்கரி நிறுவனம் மற்றும் ஹரியானா மற்றும் உத்தரபிரதேச உள்ளூர் அரசாங்கங்களை இந்திய காற்று தர மேலாண்மை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

நிலக்கரி மற்றும் எரிபொருள் எண்ணெய் போன்ற அதிக மாசுபடுத்தும் புதைபடிவ எரிபொருட்களின் உமிழ்வுகளால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தலைநகர் மண்டலம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த 2020 ஆம் ஆண்டில் இந்த ஆணையம் உருவாக்கப்பட்டது.  

இந்திய தேசிய தலைநகர் மண்டலத்தில், டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த சில மாவட்டங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.