© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீன ஊடகக் குழுமத்தின் வசந்த விழா இரவு கலை நிகழ்ச்சிக்கான 5ஆவது ஒத்திகை 19ஆம் நாள் வெற்றிகரமாக நிறைவுற்றது. சிந்தனை கலை மற்றும் தொழில் நுட்பம் ஒன்றிணைந்த ஒளிபரப்பு கருத்தின்படி, பாரம்பரிய சீனப் பண்பாடு, நடைமுறை வாழ்க்கை, உலகின் பல்வேறு நாடுகளின் ஒளிவீசும் நாகரிகங்கள் ஆகியவற்றிலிருந்து சீன ஊடக குழுமம் சிறந்த கூறுகளைத் தெரிவு செய்து, புத்துணர்வு சேர்க்கப்பட்ட கலை வடிவங்களின் மூலம், மகிழ்ச்சி தரக்கூடிய மங்களக்கரமான அரங்கில், சீன மக்களின் அன்புணர்வு மற்றும் அன்றாட வாழ்க்கையை வெளிப்படுத்த முயல்கிறது.
இதற்கு முன் 18ஆம் நாளரிவு இக்கலை நிகழ்ச்சியின் விளம்பரத் திரைப்படம் இத்தாலியின் தலைநகர் ரோம் நகரில் திரையிடப்பட்டது. அதனுடன், வசந்த விழா இரவு கலை நிகழ்ச்சியைக் கூட்டாக கண்டு மகிழ்வது என்ற பல்லூடக நிகழ்ச்சி ஐரோப்பாவில் தொடங்கியது. ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டத்தில், இக்கலை நிகழ்ச்சியின் விளம்பரத் திரைப்படம் பல்வேறு நாட்டுப் பிரதிநிதிகளின் கவனத்தைத் ஈர்த்துள்ளது.
தவிரவும், இவ்விளம்பரத் திரைப்படம் அமெரிக்காவின் விளையாட்டு அரங்குகளிலும் திரையரங்குகளிலும் காணப்படுகிறது.