ஜப்பானின் அணு கழிவு நீரைக் கடலில் வெளியேற்றும் திட்டத்திற்குப் பசிபிக் தீவு நாடுகள் எதிர்ப்பு
2023-01-20 17:06:00

ஜப்பானின் அணு கழிவு நீரைக் கடலில் வெளியேற்றும் திட்டத்திற்கு  பசிபிக் தீவுகள் மன்றம் அண்மையில் எதிர்ப்பு தெரிவித்தது.

பல்வேறு நாடுகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை இந்த அணு கழிவு நீரைக் கடலில் வெளியேற்றக் கூடாது என்பதில் ஊன்றி நிற்பதாக பசிபிக் தீவுகள் மன்றத்தின் பொதுச்செயலாளர் ஹென்றி புனே 18ஆம் நாள் தெரிவித்தார்.

பசிபிக் தீவு நாடுகள் இயற்கைசூழல் பலவீனமானது. அவற்றின் பொருளாதாரமும் கடல் மீன்பிடித்தொழிலைச் சார்ந்திருக்கின்றது. மேற்கத்திய நாடுகள் நடத்திய அணுசக்தி சோதனைகளால் பசிபிக் தீவு நாடுகள் நீண்டாகலமாக அணு கதிர்வீச்சு மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால், அணு மாசுபாட்டின் மீது அவை அதிகபட்ச கவனம் செலுத்துகின்றன என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.