சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் வசந்த விழா வாழ்த்துக்கள்
2023-01-20 17:13:44

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியும், அரசவையும், 20ஆம் நாள் முற்பகல், மக்கள் மாமண்டபத்தில் 2023ஆம் ஆண்டு வசந்த விழாவுக்கான விருந்து ஒன்றை நடத்தியது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி மற்றும் அரசவையின் சார்பாக, சீனாவின் பல்வேறு தேசிய இன மக்கள், ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் சகநாட்டவர்கள், மகாவ் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் சகநாட்டவர்கள், தைவான் சகநாட்டவர்கள், வெளிநாடுகளில் வாழ்கின்ற சீனர்கள் ஆகியோருக்கு வசந்த விழா நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

புலி ஆண்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியமான ஆண்டுகளில் ஒன்றாகும். சிக்கலான அறைகூவல்களைக் கொண்ட சர்வதேச சூழலில் உள் நாட்டு சீர்திருத்தம், வளர்ச்சி, அமைதி ஆகிய கடமைகளை சீனா நிறைவேற்ற வேண்டும். கட்சியும்  ராணுவமும், அனைத்து சீன மக்களும், ஒன்று கூடி, சவால்களைச் சமாளித்து,  விடா முயற்சியுடன், சோஷலிச நவீனமயமாக்கத்தின் புதிய அத்தியாயத்தை உருவாக்கப் பாடுபடுவோம் என்று அவர் கூறினார்.