தொற்று நோய் மூலம் சீனா மீது அவதூறு பரப்பி வரும் மேற்கத்திய செய்தி ஊடகங்கள்
2023-01-21 15:56:02

சீனாவின் வசந்த விழாவுக்கு முன்பாக, ஜனவரி 7 முதல் 18ஆம் நாள் வரை மொத்த 12 நாட்களில் இருப்புப்பாதை, சாலை, நீர்வழி மற்றும் விமானப் போக்குவரத்து ஆகியவற்றின் மூலம், 48 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முந்தையை ஆண்டை விட 47.1 விழுக்காடு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19க்கு எதிராக புதிய நடவடிக்கையை அமலுக்கு வந்த பிறகு முதலாவது வசந்த விழா இதுவாகும். வசந்த விழாவை முன்னிட்டு, சீனாவின் பல்வேறு துறைகளும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. ஆனால், அதைப் பொருட்படுத்தாமல், சில மேற்கத்திய செய்தி ஊடகங்கள் விமர்சித்த போது,  வசந்த விழாவின்போது தொற்று நோய் பரவலைச் சமாளிப்பதில் கடினமான நேரத்தை சீனா எதிர்கொள்ளும் என்று மதிப்பீடு செய்துள்ளன. உண்மைகளைப் புறக்கணித்து விட்டு, சீனா மீது மேற்கத்திய  செய்தி ஊடகங்கள் அவதூறு பரப்பி வருவதன் தந்திரத்தின்  உண்மை நோக்கம் மிகவும் தெளிவானது. அதாவது, சீனாவின் மீது அவதூறு செய்து  சீனாவின் வளர்ச்சியை அடக்கி வைப்பது. தற்போது சீனாவில் உணவகங்களில் வாடிக்கையாளர்களின்  நீண்ட வரிசை, தொழில் நிறுவனங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பணிகள், வெளிநாடுகளில் சுற்றுலா செல்லும் முன்பதிவுகளின் எண்ணிக்கை தீவிர அதிகரிப்பு போன்ற உண்மைகளே, அந்த செய்தி ஊடகங்களுக்கு மிக வலுவான பதிலடியாகும்.

பிரிட்டிஷ் பொருளியலாளர் ஜான் ரோஸின் கருத்தைப் போலவே, உண்மையை அடிப்படையாகக் கொள்ளாமல் மேற்கத்திய செய்தி ஊடகங்கள் சீனா தொடர்பான செய்திகளைப் பரப்புவது மிகவும் அபாயமானது.