சீனர்களுக்கு பண்பாட்டு விருந்து:வசந்த விழா கலைநிகழ்ச்சி
2023-01-21 20:05:13

சீன ஊடக குழுமம் சனிக்கிழமை இரவில் வசந்த விழா கலை நிகழ்ச்சியை சிறப்பாக தயாரித்து வெளியிட்டு உள்ளது.  இது உலகிலுள்ள சீனர்களுக்கு பண்பாட்டு விருந்தாக அமையும். உலகில் மிக அதிக ரசிகர்களைக் கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி என்ற கின்னஸ் உலகச் சாதனையில் வசந்த விழா கலைநிகழ்ச்சி இடம்பிடித்தது. 1983ஆம் ஆண்டு முதல், இந்தக் கலைநிகழ்ச்சி தொடர்ந்து 40ஆண்டுகளாக ஒளிபரப்ப்ப்பட்டு வருகிறது.

1983ஆம் ஆண்டில் சீனத் தேசிய தொலைக்காட்சி நிறுவனமான மத்திய தொலைக்காட்சி நிலையம் முதலாவது வசந்த விழா இரவு கலை நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பியது. குடும்பத்தினர் ஒன்று கூடி, இந்தக் கலைநிகழ்ச்சியைக் கண்டு ரசிப்பது, சீனர்கள் புத்தாண்டைக் கொண்டாடும் இன்னொரு பழக்கமாக மாறியது.