ஆரஞ்சுகளின் அமோக அறுவடை
2023-01-21 14:35:18

தென்மேற்கு சீனாவின் குய்சோ மாகாணத்தின் நான்பான்ஜியாங் நகரில் கொடை ஆரஞ்சுகளின் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. சுமார் 70 ஹெக்டர் நிலப்பரப்புடைய பழ தோட்டத்தில் தொழிலாளர்கள் ஆரஞ்சுகளைப் பறித்து பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பழப் பெட்டிகள் உடனடியாக பல்வேறு நகரங்களுக்கு அனுப்பப்பட உள்ளன. சீனப் புத்தாண்டு வசந்த விழாவை முன்னிட்டு, இந்த தரமான பழங்களின் விற்பனை சூடு பிடித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில், நான்பான்ஜியாங் நகரில் பணப் பயிர்கள் அதிகளவில்  பயிரிடப்பட்டுள்ளன. குறிப்பாக ஆரஞ்சு, கரும்பு மற்றும் மாம்பழம் உள்ளிட்டவற்றின் விளைச்சல் அதிகரித்து வருகின்றது. உள்ளூர் நடைமுறைக்கு ஏற்ற தனிச்சிறப்பு வாய்ந்த வேளாண் தொழில், கிராமங்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி அவர்களின் ஆண்டு வருவாயை அதிகரித்து வருகிறது.

கடந்த 3 ஆண்டுகளில், கோவிட்-19 தொற்று கட்டுப்பாட்டையும் பொருளாதார வளர்ச்சியையும் ஒன்றிணைத்து வறுமை ஒழிப்பில் சீனா குறிப்பிடத்தக்க சாதனைகளை பெற்றுள்ளது. கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு இலக்கை நிறைவேற்றியதை அடுத்து, சீனா ஊரக வளர்ச்சி  மற்றும் வேளாண்மை நவீனமயமாக்கலை முன்னெடுத்து வருகிறது.