புதிய நியூசிலாந்து தலைமையமைச்சர் பதவி ஏற்பகும் கிறிஸ் ஹிப்கின்ஸ்
2023-01-22 17:22:23

நியூசிலாந்தின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி 22ஆம் நாள் நடத்திய கூட்டத்தில், கிறிஸ் ஹிப்கின்ஸ் புதிய கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்ட ஜெசிந்தா ஆர்டெர்னுக்குப் பதிலாக, அவர் நியூசிலாந்தின் புதிய தலைமையமைச்சராக பதவியேற்பார்.

சொந்த காரணங்களுக்காக பிப்ரவரி 7ஆம் நாளுக்குள் பதவி விலகுவதாக தலைமையமைச்சர் ஆர்டெர்ன் 19ஆம் நாள் அறிவித்தார். அவருக்கு இன்னும் 9 மாதங்கள் பதவிக்காலம் உள்ள நிலையில் பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டார்.