உலகிற்கு அதிக வாய்ப்பு கொண்டு வரும் சீனா
2023-01-22 17:46:41

திறப்பு மற்றும் ஒத்துழைப்பு என்பது, புதிய காலத்தில் சீனத் தூதாண்மை சம்பந்தப்பட்ட முக்கிய சொற்களாக விளங்குகின்றது. உலகப் பொருளாதார இடர்பாடுகள் அதிகரித்து, பாதுகாப்புவாதம் எழுந்திருக்கும் பிண்ணனியில், சீனா வெளிநாட்டுத் திறப்பு மற்றும் ஒத்துழைப்பு ஆழமாக்கத்தைப் பின்பற்றி வருகின்றது.

2022ஆம் ஆண்டு சீன வெளிநாட்டு வர்த்தகம் தொடர்பான புதிய தரவுகளை சீனச் சுங்கத்துறை பொது நிர்வாகம் அண்மையில் வெளியிட்டது. கடந்த ஆண்டில் சீனச் சரக்கு வர்த்தகத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை முதன்முறையாக 40இலட்சம் கோடி யுவானைத் தாண்டி, வரலாற்றில் புதிய பதிவை எட்டியது. சீனா தொடர்ந்து 6ஆண்டுகளாக உலகின் முதலாவது பெரிய சரக்கு வர்த்தக நாடாக திகழ்கின்றது. தற்போதைய உலகப் பொருளாதார நிலைமையில், இந்த சாதனை, சீனா உயர் நிலையிலான வெளிநாட்டு திறப்பைக் கடைப்பிடிப்பதற்கு ஒரு நம்பத்தக்க சான்றாகும்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டு கட்டுமானத்தில் முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு திட்டப்பணியாக, ஜகார்த்தா-பாண்டுங் அதிவேக ரயில் 2022ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் நாள் சோதனையில் வெற்றி பெற்றது. இந்தோனேசியாவிலும் தென்கிழக்காசியாவிலும் முதலாவது அதிவேக ரயிலாக இது திகழ்கின்றது. ஜகார்த்தாவுக்கும் பாண்டுங்கிற்கும் இடையே 3 மணிகளுக்கு மேலான பயண நேரம், 40நிமிடங்கள் வரை குறைக்கப்படும்.

2022ஆம் ஆண்டில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளுடனான சீனாவின் வர்த்தக தொகை, 2021ஆம் ஆண்டை விட 19.4விழுக்காடு அதிகமாகும். சீனாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே இயங்கும் ரயில் வண்டிகள் எண்ணிக்கை வரலாற்றில் புதிய பதிவை எட்டி, பெரும் நெகிழ்வு தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. தவிர, கம்போடியாவில் பயன்பாட்டுக்கு வந்த முதலாவது அதிவேக நெடுஞ்சாலை, சிறந்த சாதனை பெற்ற சீன-லாவோஸ் ரயில்பாதை, ஹங்கேரி-செர்பியா ரயில் பாதை, குரோஷியாவின் கடல் பாலம் ஆகியவை உள்ளூர் போக்குவரத்து நிலையை பெரிதும் மேம்படுத்தியுள்ளன.

தவிரவும், சீனா வெளிநாட்டு திறப்பை விரிவாக்கி, பொருளாதார உலகமயமாகத்தை முன்னேற்றுவது பற்றி சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பலமுறை விளக்கிக் கூறியுள்ளார். சீனா சொல்லும் செயலும் ஒன்றாய் இருப்பதைக் கடைப்பிடிக்கிறது. சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி, சீனச் சர்வதேசச் சேவை வர்த்தகக் கண்காட்சி, சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்காட்சி, சீனச் சர்வதேச நுகர்வுப் பொருட்காட்சி முதலியவை பல ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. சி.பி.டி.பி.பி. உடன்படிக்கை, எண்ணியல் பொருளாதாரக் கூட்டாளி உறவு உடன்படிக்கை முதலியவற்றில் இணைய சீனா ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகின்றது.

புதிய ஆரம்ப புள்ளியில் திறந்த சீனா தனது புதிய வளர்ச்சியுடன் உலகிற்கு அதிகமான வாய்ப்புகளை கொண்டு வரும்.