சீனப் பொருளாதாரம் வலுவான போக்கில் வளர்ச்சியடையும்:புதிய வளர்ச்சி வங்கித் தலைவர்
2023-01-22 17:47:14

சீனப் பொருளாதாரம் 2023ஆம் ஆண்டு வலுவாக வளர்ச்சியடைந்து உலகப் பொருளாதாரத்தின் மீட்சிக்கு முக்கிய பங்காற்றும் என்று புதிய வளர்ச்சி வங்கியின் துணை தலைவர் லெஸ்லி மாஸ்டோர்ப் அண்மையில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், கோவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் சீனா சரிப்படுத்தியுள்ளது, சீனப் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும். சீனத் தொழில்நிறுவனங்களின் உற்பத்தித் திறன் தொற்றுக்கு முந்தைய நிலைக்கு மீட்சி பெற்று உலக வர்த்தக அதிகரிப்புக்கும் விநியோக சங்கிலியின் மீட்சிக்கும் உதவும் என்றார் மாஸ்டோர்ப்.

சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகத்தின் தரவின்படி, 2022ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 120லட்சம் கோடி யுவானைத் தாண்டி 2021இல் இருந்ததை விட, 3விழுக்காடு அதிகரித்தது. எதிர்பாராத பாதிப்புகள் வந்த போதும், சீனப் பொருளாதாரம் அழுத்தத்தைத் தாங்கி எதிர்பார்த்ததை விட, வளர்ச்சியடைந்து வருகிறது. 2023ஆம் ஆண்டு சீனப் பொருளாதாரத்தின் அதிகரிப்பு வேகம் இந்தப் போக்கை நிலைப்படுத்தி முந்தைய எதிர்பார்ப்பைத் தாண்டும் என்று சர்வதேச சமூகம் கருத்து தெரிவித்துள்ளது.